மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் ரஜினிகாந்த் என்ற பெயர் இன்னும் நிலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'தர்பார், அண்ணாத்த' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்காமல், மிகச் சுமாரான வசூலைத்தான் கொடுத்தன. இருப்பினும் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என இன்றைய பல இயக்குனர்கள் ஆசையுடன் காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்தின் அடுத்த படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'ஜெயிலர்' படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், திரைக்கதை முழு வடிவம் பெற சில மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த' ஆகிய படங்களின் முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறாமல் ஐதராபாத், மும்பை, டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. இப்படத்திற்காக சில பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.