இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கமல் நடித்த ‛இந்தியன்' படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால் நடிக்க ஷங்கர் இயக்கினார், லைக்கா நிறுவனம் தயாரித்தது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்புகள் பல தடைகளை சந்தித்தது. முதலில் கமலின் இந்தியன் தாத்தா வேடம் முன்புபோல அமையவில்லை, அடுத்து கொரோனா பிரச்சினை, அடுத்து படப்பிடிப்பில் நடந்த விபத்து, அடுத்து தயாரிப்பு நிறுவனம் - ஷங்கர் மோதல் இப்படியாக தள்ளிப்போன இந்த படத்தின் பணிகள் இப்போது மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் கமல் அங்கு தனது இந்தியன் 2 பணிகளை தொடங்கி உள்ளார். கமலுக்கு இந்தியன் தாத்தா மேக்கப்பும், அவ்வை சண்முகியில் பெண் மேக்கப்பும் போட்டவரான ஹாலிவுட் மேக்அப் நிபுணர் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மைக்கேலின் மகளும் ஹாலிவுட் நடிகையுமான மெக்கென்சி உடன் இருந்தார்.
சந்திப்பு படத்தை வெளியிட்டுள்ள மெக்கென்சி. இந்த வாரத்தின் மிக சிறந்த தருணம் கமலை சந்தித்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் கமல் மைக்கேலுடன் இந்தியன் 2 மேக்அப் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அதோடு மெக்கன்சியும் இந்தியன் 2வில் நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் இன்று முதல் அமெரிக்காவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.