500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் வில்லி வனஜாவாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் 'ஊர்வம்பு லெக்ஷ்மி'. 90'ஸ் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமான ஊர்வம்பு என்கிற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான லெக்ஷ்மி தொடர்ந்து சீரியல், சினிமா என படிப்படியாக வளர்ந்தார். 42 வயதை எட்டியுள்ள அவர், கல்லூரி படிக்கும் வயதுள்ள மகனுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பார்ப்பதற்கு 30 வயது பெண்ணாக ஜொலிக்கும் லெக்ஷ்மியிடம் பெண்கள் பலரும் பிட்னஸ் சீக்ரெட்டை சொல்லுமாறு அடிக்கடி கேட்டு வருகின்றனர். அவரும் தனது யூ-டியூப் சேனலில் அழகு குறிப்பு, யோகா, பிட்னஸ் பற்றிய டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் வகையில் தனது வெயிட் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2015, 2016 மற்றும் 2017 காலக்கட்டத்தில் அதிக எடை போட்டு குண்டாக இருந்த லெக்ஷ்மி தீவிரமான டயட் மற்றும் வொர்க்-அவுட் செய்து எப்படி இப்போது ஃபிட்டாக மாறியிருக்கிறார் என்பதை விளக்கும் வகையில் ஒரு ஷார்ட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைபார்க்கும் பலரும் 'இவ்வளவு குண்டா இருந்தா இப்படி பிட்டா மாறியிருக்கீங்க' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். மேலும், அவரது விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி கமெண்ட் அடித்து வருகின்றனர்.