500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றார்கள். அதற்குப் பிறகு தற்போது ஸ்பெயின் நாட்டிற்கச் சென்றுள்ளார்கள்.
திருமணத்திற்கு முன்பாக காதல் ஜோடியாக இருந்த போது அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டார்கள். அப்போது பல 90ஸ் கிட்ஸ்கள் பொங்கித் தள்ளினார்கள். திருமணம் முடிந்த பிறகாவது இந்த ஜோடி கொஞ்சம் அடங்கும் என்று எதிர்பார்த்தால் இப்போது சென்றுள்ள சுற்றுலாவிலும் ஜோடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு பேச்சுலர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். இடைவிடாமல் விதவித புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது, போதும் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த ஜோடி நிறுத்துமா என்பதுதான் கேள்வி.