நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இருபாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் ஏற்கனவே ‛பொன்னி நதி' என்ற முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து ‛சோழா சோழா' என்ற இரண்டாவது பாடலை நாளை(ஆக., 19) மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர். ஆதித்த கரிகாலன் பெருமையை சொல்லும் விதமாக இந்த பாடல் உருவாகி உள்ளது. இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, சத்யபிரகாஷ், விஎம் மகாலிங்கம், நகுல் அபயங்கர் ஆகியோர் பாடி உள்ளனர்.