நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாக்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில்தான் நடைபெறுகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் தங்களது படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்துவதே கிடையாது. விஜய் மட்டும் பெயருக்கு சில நாட்கள் இங்கு படப்பிடிப்புகளை நடத்துவார்.
விஜய் தற்போது தெலுங்குத் தயாரிப்பாளரின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்ள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. அதற்காக விஜய் சென்ற போது விமான நிலையப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அவரைத் தொடர்ந்து அஜித் அதே விசாகப்பட்டிணம் சென்ற போது விமான நிலைய பேருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 61வது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தான் நடக்கிறது. விஜய், அஜித் இருவருமே அடுத்தடுத்து விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது எனத் தகவல். விரைவில் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக அங்கு செல்ல உள்ளார்.