நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேஜிஎப் பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்து வரும் பான் இந்திய படம் ‛சலார்'. நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் சலார் படத்தை தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். அதிரடி ஆக் ஷன் கதையில் கேஜிஎப் மாதிரியான கதைக்களத்தில் இந்த படம் தயாராகும் என தெரிகிறது.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த படம் வெளியாகும் என முன்பு அறிவித்தனர். ஆனால் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் இதன் படப்பிடிப்பு மெதுவாக நடந்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினமான இன்று(ஆக., 15) சலார் படத்தின் அப்டேட்டை அதாவது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் அடுத்தாண்டு செப்., 28ல் வெளியாகும் என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும் என்னது இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமான என வருத்தப்படவும் செய்கின்றனர். கேஜிஎப் படங்கள் மூலம் இயக்குனர் பிரசாந்த் நீல்லும், பாகுபலி படங்கள் மூலம் நடிகர் பிரபாஸூம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தனர். இவர்கள் இருவரும் இணையும் படம் இது என்பதால் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.