நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து வருவதால் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அதனால், ஷங்கர் தற்போது சென்னையில் 'இந்தியன் 2' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்தை விரைந்து முடித்துத் தருமாறு ஷங்கரிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியில் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறலாம் என்பதே எண்ணம்.
அதனால், ஷங்கர் தெலுங்குப் படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு வர உள்ளார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசி வருகிறார்களாம். அதற்குள் ராம் சரண் வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமான பின்புதான் எதுவும் உறுதியாகத் தெரிய வரும்.