500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'சுந்தரி' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், தமிழ் சின்னத்திரையுலகில் சிறந்த புனைவு கதாபாத்திரமாக 'சுந்தரி' கதாபாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் பேவரைட் ஹீரோயினாக கேப்ரில்லா செல்லஸ் வலம் வருகிறார். இதனால், இவரது ரசிகர் பட்டாள எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா அடிக்கடி, ரீல்ஸ், டான்ஸ், கருத்து வீடியோ, புகைப்படங்கள் என எதையாவது வெளியிட்டு ரசிகர்களை என்டர்டெயின்மெண்ட் செய்து வருகிறார்.
அந்த வகையில் அடிக்கடி சக நடிகர்களுடன் ரீல்ஸ் வெளியிட்டு வந்த கேப்ரில்லா தற்போது பயங்கரமாக பல்பு வாங்கியுள்ளார். சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகர் அரவிஷூடன் டான்ஸ் ஆட வந்த கேப்ரில்லா, டான்ஸ் ஆட தொடங்கும் போது அவரது சவரி முடி கீழே விழுந்து விடுகிறது. இதை அஸிஸ்டெண்ட் ஒருவர் எடுத்து அரவிஷ் கையில் கொடுக்க, அரவிஷ் அதை சுந்தரியின் முன் ஆட்டி கலாய்த்து தள்ளுகிறார். பல்பு வாங்கிய கேப்ரில்லா தரையில் அமர்ந்து வெட்கத்தில் முகத்தை மூடி கொள்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தற்போது கேப்ரில்லாவை 'சவரிமுடி சுந்தரி' என பட்டப்பெயர் வைத்து கலாய்த்து வருகின்றனர்.