நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பூவே உனக்காக' சீரியலில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி ரீப்ளேஸ் செய்யப்பட்டதால் டிஆர்பியில் பெர்பார்மன்ஸ் செய்ய முடியாமல் திணறியது. இதனையடுத்து சமீபத்தில் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த சீரியலின் தொடக்கத்தில் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. கன்னடத்து பைங்கிளியான இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னி ஆனார். சீரியலை விட்டு விலகிய பின் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ரசிகர்கள் பலரும் ராதிகா ப்ரீத்தி ஏன் சீரியலை விட்டு விலகினார்? மீண்டும் சீரியலில் நடிப்பாரா? என கேள்விகள் கேட்டு வந்தனர். இதற்கிடையில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்த 'நாதிரு தின்னா' திரைப்படத்தின் ரிலீஸ் புரோமோஷன்களும் கலைக்கட்டியதால் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ராதிகா ப்ரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், ராதிகா ப்ரீத்தியின் ரசிகர்கள் பலரும், அவரது ரீ- என்ட்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.