நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவருக்கு தேவையான நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் தனக்கு ஏற்பட்ட இந்த நிலை இன்னொருவருக்கும் ஏற்படக்கூடாது என்று சொல்லி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார் நடிகை மீனா.
இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛இந்த உலகில் ஒரு உயிரை காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உடல் உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்றும் உன்னதமான வழியாகும். நீண்ட நாள் நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. நான் இதை தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். எனது கணவருக்கு ஒரு நன்கொடையாளர் கிடைத்திருந்தால் எனது வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு நன்கொடையாளர் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும். அதனால் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் மீனா.