வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கன்னடத்தில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவர். தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அமிதாப் பச்சனுடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அடிக்கடி மும்பை செல்லும் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 8 கோடி என்கிறார்கள். மூன்று அறைகள் கொண்ட இந்த வீட்டில் தனது அம்மாவுடன் ராஷ்மிகா தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார். ராஷ்மிகாவுக்கு அவர் பிறந்த ஊரான கர்நாடக மாநிலம் கூர்க்கில் பிரமாண்ட பங்களா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் மற்றும் சென்னையிலும் வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.