நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ஆல்யா மானசா. அதன்பின் பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது ரியா விஸ்வநாத் என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா விலகிய பின் சீரியல் ட்ராப் ஆகிவிடும் என பலரும் கருதி வந்த நிலையில், ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை ஆல்யா மானசாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ராஜா ராணி சீசன் 2வின் இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் முதல் ஆள். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று சொன்னால் போதும், உடனே மாடியிலிருந்து கூட குதிக்க தயராகிவிடுவார். சின்சியாரிட்டியின் மறு உருவமே ஆல்யா தான்' என்பது போல் அவரை புகழ்ந்தார்.
இதன்காரணமாகவும், குழந்தை பிறந்த பின் ஆல்யா கலந்து கொள்ளும் முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதாலும் ரசிகர்கள் பலரும் வெற்றிவிழா நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியானது வரும் சுதந்திர தினத்தன்று மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.