நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளிவந்த படம் 'ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்'. நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்ததுடன் இந்த படத்தையும் அவரே இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், ஓரளவு திருப்திகரமான வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த நிலையில் மும்பையில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளார் மாதவன்.
இந்த நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் பாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆச்சரியமாக நடிகர் விஜய்சேதுபதியும் இந்த சக்சஸ் மீட்டில் பங்கேற்றார். ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள விஜய்சேதுபதி மாதவனின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது. விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து இவர்கள் மாதவனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த வெற்றி சந்திப்பில் இருவரும் சந்தித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.