நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நேரம், பிரேமம் படங்கள் மூலம் புகழ்பெற்ற மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கி உள்ள படம் கோல்ட். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கி உள்ளார். பிருத்விராஜ் தயாரித்து, நடிக்கிறார். நயன்தாரா படத்தின் ஹீரோயின். மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ், பாபு ராஜ், வினய் போர்ட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் படம் வருகிற செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதுபற்றி "கோல்ட் ஓணத்துக்கு உருகும்" என கூறியுள்ளார்.