ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் 'பாகுபலி' கட்டப்பா பாணியில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி'க்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது வைப்பார் கட்டப்பா. அது போலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்” என அப்பதிவில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தெலுங்கில் முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற 'மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.