நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். அவர் கதாநாயகியாக நடித்த 'யானை' படம் கடந்த மாதம் வெளிவந்தது, 'குருதி ஆட்டம்' கடந்த வாரம் வெளியானது. அடுத்து அவர் தனுஷுடன் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
'அகிலன், பொம்மை, ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'பத்து தல, இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் ஓய்வெடுக்க பிரியா எங்குமே செல்லவில்லை. அடுத்த படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பாக அவருக்கு சில நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் தற்போது பாரீஸிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தன்னுடன் தனது காதலரையும் அழைத்துச் சென்றுள்ளார் என்று தகவல்.
பாரீஸிலிருந்து சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் அவரது காதலர் எடுத்த புகைப்படங்களாகவும் இருக்கலாம்.