நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். தமிழ், தெலுங்கில் ஆறு வருடங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது. தெலுங்கில் கடந்த மூன்று சீசன்களையும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். அடுத்து ஒளிபரப்பாக உள்ள ஆறாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான புரோமோ வெளியானது.
விரைவில் ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் பரபரப்பான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
தமிழில் கடந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். அடுத்து ஆறாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் புரோமோ வரை வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ் பிக்பாஸ் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.
'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க உள்ளார், சில படங்களைத் தயாரிக்க உள்ளார். இரண்டு வருடங்களாக நின்று போன 'இந்தியன் 2' படமும் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அவற்றிற்கிடையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி நேரத்தை ஒதுக்குவார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.