மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
அமலாபால் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் படம் கடாவர். வருகிற 12ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தில் அமலா பாலுடன் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் அமலாபால் பேசியதாவது: அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து 'கடாவர்' படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்.
படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் தற்போது முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இவ்வாறு அமலாபால் கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமலாபால் "ராட்சசன் படத்திற்கு பிறகு எனக்கு த்ரில்லர் படங்களே அதிகமாக வந்தது. ஆனால் நான் காதல் கதைகளில் நடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இனி படங்கள் தயாரிக்க மாட்டேன். கடாவர் படம் எனக்கு பல கசப்பான அனுபவங்களை தந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள். நான் இப்போது என்னையும், என் சினிமாவையும் மட்டுமே காதலிக்கிறேன்" என்றார்.