நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.