இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னதாக ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக தான் மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளதாக கூறியிருப்பதால் அந்த படம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம் முதல் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதுதான்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடிப்பது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, ‛‛இயக்குனர் ராஜமவுலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.