ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ்த் திரையுலகத்தில் ஹீரோக்கள் உச்ச நடிகராக மாறிய பிறகு தங்களுடன் ஆரம்ப காலத்தில் நடித்த ஹீரோயின்களை மறந்துவிடுவார்கள். அவர்கள் உச்சத்தில் இருக்கும் போது, எந்த ஹீரோயின்கள் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களோடு மட்டுமே நடிப்பார்கள். அந்த உச்ச ஹீரோக்களுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்காமல் அந்த ஹீரோயின்கள் அடுத்த கட்ட ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க இறங்கி வருவார்கள். அதற்கு உதாரணமாய் பலரைச் சொல்லலாம்.
'கில்லி' படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த விஜய், த்ரிஷா ஜோடி பின்னர் 'திருப்பாச்சி, ஆதி, குருவி' ஆகிய படங்களில் மட்டும் ஜோடி சேர்ந்தது. கடைசி இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால் அத்துடன் அந்த ஜோடி இணைந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டது. பின்னர் மற்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் த்ரிஷா. அதனால்தான் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன பின்னும் கதாநாயகியாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய்யின் 67வது படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல். கதாபாத்திரத்திற்கு அவர்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்துள்ளார்களாம்.
த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. 40 வயதை நெருங்கினாலும் இன்னும் 20 வயது பெண் போலவே உள்ளார் என அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அதனால் கூட மீண்டும் விஜய் படத்திற்கு அவரைத் தேர்வு செய்திருக்கலாம்.