இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினி ,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக தேவா திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பல படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவா, தற்போது ‛கந்த முகமே' என்ற பெயரில் ஒரு முருகன் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு மீடியாக்களை சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் முருக பெருமானுக்காக கந்த முகமே என்ற பெயரில் ஆல்பம் ஒன்றே வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே வழங்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தேவா.