நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேயர்களின் மனங்களை வென்றவர் பாடகி மானசி. இவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பலரும் சமூக வலைதளத்தில் மானசியை பாலோ செய்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மானசி அவ்வப்போது சில ப்ராடக்ட் புரோமோஷன்களுடன் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பெண்களின் ஒருதலைக்காதலை கான்செப்ட்டாக வைத்து 'காதல் போதை' என்ற 1 நிமிட ஆல்பம் பாடலை மானசி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை மானசியே பாடி நடனமாடி நடிக்கவும் செய்துள்ளார். அதில் அவரது எக்ஸ்பிரஷன் செம கியூட்டாக இருக்கிறது. ஏற்கனவே மானசியை நடிக்க சொல்லி கேட்டு வரும் ரசிகர்கள் மானசியின் இந்த பெர்பார்மென்ஸை பார்த்து விட்டு 'அடுத்த ஹீரோயின் ரெடி' என வாழ்த்தி வருகின்றனர்.