நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் அம்மா நடிகையாக பிரபலமாகியுள்ள மீரா கிருஷ்ணன், பாசமான அம்மா கதாபாத்திரத்திலும் சரி, கொடூரமான வில்லி கதாபாத்திரத்திலும் சரி நடிப்பில் அசத்தி வருகிறார். சீரியலில் என்னதான் அம்மா நடிகையாக இருந்தாலும் இவரது ஆக்டிவிட்டியை பார்க்கும் பலரும் மீராவை 'கியூட் சிக்ஸ்டீன்' என்றே புகழ்ந்து வருகின்றனர். ஒருமுறை மீரா அவரது மகளுடன் நடனமாடும் வீடியோவை பார்த்து 'அக்காவும் தங்கையும்' என்று கூட கமெண்ட் அடித்தனர்.
சமூக வலைதளத்தில் மீராவின் புகைப்படங்களை பார்க்கும் எவரும் அவர் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு தாய் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இளமையாக காட்சி தரும் மீராவுக்கு ரசிகர்கள் அதிகம். அவருடைய புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என அனைத்துமே லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த வகையில் மீரா கிருஷ்ணன் தற்போது பரதம் ஆடும் புகைப்படங்களையும், அம்மாவிடன் நிற்கும் புகைப்படத்தையும் த்ரோபேக் புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இளமைக்காலத்தில் மீரா இவ்வளவு அழகா? என்றும் க்ளாசிக்கல் டான்சரா? என்றும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.