500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
2014ம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் வெற்றி பெற்றதால் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. பிசாசு- 2 படத்தில் 15 நிமிடம் காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. ஆனால் தற்போது அந்த காட்சிகளை மிஷ்கின் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். காரணம், பிசாசு- 2 படத்தை குழந்தைகளுக்காக எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த நிர்வாண காட்சியால் குழந்தைகளால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகளை படத்தில் இருந்து கத்தரித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின் .