500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களை என்டர்டெயின் செய்வதில் விஜய் டிவி தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. புதிய கதைக்களத்துடன் சீரியல்கள், வித்தியாசமான கான்செப்ட்டில் ரியாலிட்டி ஷோக்களை தயாரித்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை மார்க்கெட்டிங் செய்வதிலும் நல்ல யுக்தியை கையாண்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து காமெடி கலந்த நடன நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஐ தற்போது ஒளிபரப்பி வருகிறது.
வாராவாரம் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் நடைபெறும் இந்த நடன நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண்கள் எல்லோரும் பெண்ணாகவும் பெண்கள் ஆணாகவும் வேடமிட்டு நடனமாட உள்ளனர். ஏற்கனவே இந்த டாஸ்க்குக்காக ஜெண்டர் ஸ்வாப் கெட்டப் போட்டுள்ள அமீர், பாவ்னியின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பெண் வேடமிட்ட மற்றொருபோட்டியாளரின் புகைப்படத்தை வெளியிட்டு, அதை யார் என கண்டுபிடிக்கும் படி நேயர்களை சேலஞ்ச் செய்துள்ளது.
பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் போலவே காட்சி தரும் அந்த போட்டியாளரை பார்த்து அது யார் என நேயர்களே சற்று நேரம் குழம்பிவிட்டனர். ஆனால், சிறிது நேரம் உற்று பார்த்த பின்பு தான் அது அபிஷேக் என தெரிகிறது. அபிஷேக் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் நாடியாவுடன் சேர்ந்து நடனமாடி வருகிறார். இருவரும் அருமையாக நடனமாடி எவிக்ஷனிலிருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர். தற்போது அவரது இந்த பெண் கெட்டப் டிரான்ஸ்பர்மேஷனை பார்க்கும் நேயர்கள் இந்த வார எபிசோடில் அபிஷேக்கின் நடனத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.