500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. அதைத்தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சற்று பிரபலமானார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்துள்ள காட்டேரி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
இவர் பதிவிட்டுள்ளதாவது : ‛‛சலுகை பெற்றவர்கள் ஏணியில் ஏறுவதற்கு எளிதாக வழி கிடைப்பதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பாத்துக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் நெப்போடிசம் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதேசமயம் வாரிசு நட்சத்திரங்களுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.