வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் |
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் படமான ‛ஜோக்கர்' உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது.
தற்போது ஜோக்கர் 2ம் பாகம் உருவாகி வருவதாகவும் 2024ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜாக்குயின் போனிக்ஸ் தான் இதிலும் நடிக்கிறார். லேடி காஹா ஹீரோயினாக நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். டோட் பிலிப்ஸ் இயக்குகிறார். ஜோக்கர் இரண்டாம் பாகம் தயாராவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் படத்தை பார்க்க இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்று கவலையும் அடைந்திருக்கிறார்கள்.