பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் |
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இவர்கள் தவிர மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் ஷங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்து மகள் அதிதி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்.
படப்பிடிப்புகள் 3 கட்டமாக நடக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், பிரின்ஸ் படங்கள் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கு இடையில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் பணியும் தொடங்க இருக்கிறது.