ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிரபலமானவர் சரத். சின்னத்திரையின் மொட்டை ராஜேந்திரன் என செல்லமாக அழைக்கப்படும் சரத், விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு காமெடி செய்து வருகிறார். இந்நிலையில் சரத் வெளியிட்ட புகைப்படத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்திய திரையுலகின் நடிகர்களான ரன்வீர் சிங், விஷ்ணு விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் பிட்டான உடம்பை வெளிக்காட்டும் வகையில் நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். சோஷியல் மீடியாவில் இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்து பேசு பொருளாகியது. அதன்பிறகு அந்த லிஸ்டில் யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை. இப்போது சரத், விஷ்ணு விஷால் போல் மேல் சட்டை அணியாமல் படுத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் சிலர் 'என்ன டிரெண்டிங்ல நீங்களும் ஜாயிண்ட் பண்ணீட்டீங்களா?' என ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அதேசமயம் 'இதெல்லாம் தேவதானா?' என சரத்தை திட்டி தீர்ப்பதுடன் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை விரைவில் நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.