ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆலியா தற்போது தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே நடிகைகள் தாய்மை அடைந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டும் நடிக்க வருவார்கள். ஆனால், அம்மாவானா பின்னும் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என ஆலியா தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருப்பதால் ஓய்வில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' படங்களில் நடித்து முடித்துள்ள ஆலியா, 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பின் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.