நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்து விட்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அவ்வப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் செலெக்ட்டிவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் தற்போது ஒரே சமயத்தில் அவர் நடித்த இரண்டு படங்கள் சோசியல் மீடியாவின் ஹைலைட் ஆகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அனுபம் கெர் சம்பந்தமாக இந்த இரண்டு படங்களின் படக்குழுவினரும் ஒரேநாளில் அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளனர்.
இவற்றில் அனுபம் கெர் நடித்துள்ள கார்த்திகேயா-2 படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தற்போது அனுபம் கெர் முடித்துள்ளார். இது தவிர அவர் ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து இவரது கேரக்டர் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் திடீர் கவனம் பெற்றுள்ளார் அனுபவம் கெர்.