மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழில் கொடி, தள்ளிப் போகாதே போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது தெலுங்கில் கார்த்திகேயா 2, 18 பேஜஸ், பட்டர்பிளை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் நிகில் சித்தார்த்துக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கார்த்திகேயா 2 என்ற படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இப்படத்தின் பிரமோஷனில் நாயகன் நிகில் சித்தார்த் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அனுபமா பிரமோஷனில் கலந்து கொள்ளாததால் அவர் மீது பல தரப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.
இந்த நிலையில் உடனடியாக அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அவர் கூறுகையில், கார்த்திகேயா-2 படத்தின் பிரமோசனில் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை என்பது பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வேறு இரண்டு படங்களில் தற்போது இரவு பகலாக தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். அதோடு கார்த்திகேயா- 2 படத்தின் வெளியீட்டு தேதிகள் துரதிஷ்டவசமாக பலமுறை மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக எனது கால்சீட்டை மற்ற படங்களுக்கு கொடுத்து விட்டேன். இந்த நேரத்தில் திடீரென்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என்று அறிவிக்கப்பட்ட போது என்னால் பிரமோசனில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி கார்த்திகேயா- 2 படத்தின் பிரமோசனை நான் திட்டமிட்டு தவிர்க்கவில்லை என்று கூறியுள்ள அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தின் நாயகன் நிகில் சித்தார்த் பிரமோசனங்களில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக அவரை பாராட்டுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.