நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராவதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தை தமிழில்தான் தயாரிக்கிறோம் எனச் சொல்லி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர்களின் சில சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளை 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தான் நடத்தினார். தற்போது அவரே ஸ்டிரைக்கை மீறி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி படப்பிடிப்பை நடத்துவதை மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம்.
அவரைப் போலவே தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் தயாரிப்பாளரான நாகவம்சியும் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியமான ஒரு உறுப்பினர். இதனால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம்.