இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
நடிகர் தனுஷ், அமலாபால் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் 2014ம் ஆண்டு வெளியானது. வேல்ராஜ் இயக்கி இருந்தார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ஐஸ்வர்யா தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம் பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம் பெறவில்லை என்றும் புகார் எழுந்தது. எனவே படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷூக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் என்ற முறையில் ஐஸ்வர்யாவும், நடித்தவர் என்ற முறையில் தனுசும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் முதலில் ஐஸ்வர்யாவுக்கு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது போன்று தற்போது தனுசுக்கும் விலக்கு அளித்துள்ளது. வழக்கு ரத்து செய்வது தொடர்பான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.