நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று(ஆக.,1) முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழில்தான் எடுத்து வருகிறார்களாம். தெலுங்கில் டப்பிங் செய்துதான் வெளியிடப் போகிறார்களாம். ஸ்டிரைக்கில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறாது. மற்ற மொழிப் படங்களுக்கு ஒத்துழைப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்களாம். அதனால்தான், விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே, மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.