இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் ஜி-5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகி இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடருக்கு சைமன் கே. கிங்ஸ் இசை அமைத்திருக்கிறார். கிருத்திகா உதயநிதியின் இந்த வெப் தொடரை வாழ்த்தி அவரது கணவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனது டைரக்டர் கிருத்திகாவின் பேப்பர் ராக்கெட் வெப் தொடருக்கு வாழ்த்துக்கள். இது உன்னுடைய சிறந்த படைப்பு. இதை எழுதியுள்ள விதமும், திரையில் கொண்டு வந்துள்ள விதமும் சூப்பராக உள்ளது. பேப்பர் ராக்கெட் குழுவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது சீசனுக்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதற்கு கிருத்திகா, ‛‛அப்படியென்றால் என்னை ஒரு டிரிப்பிற்கு கூட்டி செல்லுங்கள். அது பேப்பர் ராக்கெட் சீசன் 2வாக இருக்கும்'' என்றார்.