இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு ஐந்து வருடம் இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் மோகன் ராஜா தான் அறிமுகமான தெலுங்கு திரையுலகிலேயே மீண்டும் படம் இயக்கி வருகிறார். மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக, காட் பாதர் என்கிற பெயரில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்து இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன்ராஜா.
இந்த படத்தில் கிளைமாக்ஸில் இடம்பெறும் டான்ஸ் ஒன்றை வடிவமைத்து கொடுத்துள்ளார் பிரபுதேவா. படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இத்தனை வருடங்களில் பிரபுதேவாவுடன் மோகன் ராஜா இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல்முறை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பிரபுதேவா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் இயக்கிய நுவ்வொஸ்தானே நெனொத்தண்டனா என்கிற படத்தை, தமிழில் சம்திங் சம்திங் என்கிற பெயரில் மோகன் ராஜா ரீமேக் செய்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.