ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், சிம்பு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சித்தி இதானி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் டீசரை கடந்த வருடக் கடைசியிலேயே வெளியிட்டார்கள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை வெளியாக உள்ளன.
கவுதம், ரஹ்மான், சிம்பு கூட்டணி 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் 'அச்சம் என்பது மடமையடா' படம் கால தாமத வெளியீட்டால் கவனம் ஈர்க்காமல் போய்விட்டது. 'வெந்து தணிந்தது காடு' படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என்பதற்கு இன்னும் நாற்பத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.