இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விடவும், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய வேலை. அதற்காக ஹிந்தித் திரையுலகில் நிறையவே உழைப்பார்கள். தமிழ் நடிகர்கள், நடிகைகளைப் போல பிரமோஷனுக்கு வர மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்.
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது 'லிகர்' படம் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார். ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை ஆரம்பித்துவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று மும்பை லோக்கல் டிரெயினில் விஜய் தேவரகொண்டா, படத்தின் நாயகி அனன்யா பாண்டே பயணம் செய்துள்ளார்கள்.
அனன்யா பாண்டே அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இருக்கையில் அவர் அமர்ந்திருக்க அவரது மடி மீது தலை வைத்து விஜய் படுத்திருப்பது போன்ற புகைப்படமும் அதில் அடக்கம். ஆளில்லாத டிரெயினில் ஏன் பயணிக்கிறீர்கள், பிஸியான டிரெயினில் பயணிக்கலாமே என ரசிகர்கள் அதற்கு கிண்டலாக கமெண்ட் போட்டுள்ளார்கள்.