நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க சென்ற நடிகர்களில் பிரஜனும் ஒருவர். தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைக்க போராடி வருகிறார். தற்போது அவர் 'டி3'என்ற படத்தில் நடிகை வித்யா பிரதீப்புடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சட்டை இல்லாமல் நிற்கும் பிரஜன் சிக்ஸ் பேக் உடம்புடன் கையில் விலங்குடன் காட்சியளிக்கிறார். மேலும், 'இதுவரை சொல்லப்படாத உண்மை கதை' என்ற வாசகமும் போஸ்டரில் ஹைலைட் செய்து காட்டப்பட்டுள்ளது. சினிமாவில் பெரிய ப்ரேக் கொடுக்க வேண்டும் என காத்திருந்த பிரஜனுக்கு 'டி3' படம் நல்ல ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.