நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரவீனா தாஹா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது 'மெளன ராகம் -2' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வயதுக்கு மீறி கவர்ச்சி காட்டி வரும் ரவீனா இன்ஸ்டா இளைஞர்களின் கனவு கன்னி வலம் வருகிறார். அவர் போடும் பதிவுகள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. இந்நிலையில், அவர் சினிமாவில் மட்டுமில்லை சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான வசந்தம் தொடரில் பள்ளி செல்லும் சிறுமியாக 5 வயதிலேயே ரவீனா தாஹா நடித்துள்ளார். அந்த புகைப்படமானது சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் ரவீனாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு இந்த குழந்தையா இப்ப ஹீரோயின்? என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.