நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா பிசியாக இசையமைத்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு மாற்றாக பாலச்சந்தர், மணிரத்தினம் போன்ற இயக்குனர்களின் புதிய கண்டுபிடிப்பாக இசைப்புயலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். பாலசந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் முதன்முதலாக இவரது இசைப்பயணம் வெற்றிகரமாக துவங்கியது. அதைத்தொடர்ந்து தாங்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களிலும் வெற்றிப்பாடல்களை கொடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம் கூட்டணி இன்று வரை முப்பது வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 1992 ஆகஸ்ட் 15-ல் வெளியான ரோஜா திரைப்படம் மட்டுமல்ல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் முப்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்த நினைவுகளை பகிரும் விதமாக ரோஜா படத்தில் பணியாற்றியபோது இயக்குனர் மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.