500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
அஜித் நடிப்பில் ‛நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அஜித்தின் 61வது படத்தையும் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதன் காரணமாகவே ஐதராபாத்தில் இந்த படத்திற்காக மவுண்ட் ரோடு செட் போடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும்போது சில வெளிநாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் செய்த அஜித் தற்போது திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அஜித் 61 வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் வில்லனாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் தான் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப்- 2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக அஜித் மீண்டும் ஆகஸ்ட் மாதம் புனேயில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அப்போது அஜித், சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.