500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஹாலிவுட் சினிமாவில் அடுத்து எதிர்பார்க்கப்படும் படம் புல்லட் ட்ரெயின். டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஆரோன் டெய்லர், பிராட் பிட் , சாண்ட்ரா புல்லக் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரையன் டைரி ஹென்றி, அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆப் அல்ட்ரான் புகழ் ஆரோன் டெய்லர் - ஜான்சன், தி பாய்ஸ் புகழ் கரேன் புகுஹாரா, ப்யூரி புகழ் லோகன் லெர்மன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தியாவில் 4ம் தேதி வெளியாகிறது. சோனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவருகிறது.