நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசைமைப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. ஓரளவுக்கு விமர்சனத்தை பெற்ற இந்த படம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து அதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள் படக் குழுவினர். இதுகுறித்து அருள்நிதி கூறியிருப்பதாவது: இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து, இதனை வெற்றி படமாக்கியுள்ளார். அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் "தேஜாவு" திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்கிறார் அருள்நிதி.