நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூது கவ்வும் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோதாதே உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பார்ட்டி படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எந்த ஊரில் படப்பிடிப்பு நடந்தாலும் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று விடுவார். இதுதவிர படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ராமேஸ்வரம் வீட்டுக்கு சென்றார் சஞ்சிதா. அங்கு கலாமின் உறவினர்களை சந்தித்து பேசினார், அவர்கள் சஞ்சிதாவுக்கு அக்னி சிறகுகள் புத்தகத்தை வழங்கினார்கள். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து சஞ்சிதா கூறியிருப்பதாவது: அப்துல் கலாம் அய்யாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது அறிவும், அமைதியும் எனக்கு பிடிக்கும். அவர் உயிரோடு இருக்கும்போது சந்திக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. திடீரென அவர் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. சென்று வந்தேன். அந்த வீட்டில் இருந்த தருணங்கள் என் வாழ்க்கையில் முக்கியமானது என்கிறார் சஞ்சிதா.