நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலுடன் ஆக்ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளவர் ஆகன்ஷா புரி. இந்தி சின்னத்திரை நடிகையான இவர் 'விநாயகர்' என்ற தமிழ் தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழில் ஆர்யா சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது போன்று பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றை தனியார் சேனலில் நடத்தினார். இதில் 12 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆகன்ஷா புரியை மணமகளாக தேர்வு செய்தார் மிகா சிங்.
சுயம்வர நிகழ்ச்சியிலேயே மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பாடகர் மிகா சிங், பிரபல பாடகர் தாலர் மெகந்தியின் சகோதரர். மிகா சிங்கும், ஆகன்ஷா பூரியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.