நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பதிப்புகள் ஜீ 5 ஓடிடி தளத்திலும் வெளியாகின.
தற்போது புதிதாக தென்னிந்திய மொழிப் பதிப்புகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம் மூன்று ஓடிடி தளங்களில் இடம் பெற்றுள்ள பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன் சில படங்களை இரண்டு ஓடிடி தளங்களில் கொடுத்துள்ளார். ஆனால், மொத்தமாக மூன்று ஓடிடி தளங்களில் இடம் பெற்றுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டது. அதை பல கோடி பேர் பார்த்துவிட்டனர். இந்நிலையில் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இத்தனை மாதங்கள் கழித்து வெளியிடப்படுவது திரையுலகத்தில் ஆச்சரியப்படுத்தி உள்ளது.